சிறையில் இருக்கும் ரஞ்சனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு?
advertise here on top
advertise here on top

சிறையில் இருக்கும் ரஞ்சனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்யுமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பதில் ஜனாதிபதியை சந்தித்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.