
ஏற்கனவே இன்று (16) அதிகாலை ஒரு டீசல் கப்பல் நாட்டிற்கு வந்துள்ளதுடன், தரம் மற்றும் மாதிரி சோதனை தற்போது நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
இன்று பிற்பகுதியில் மற்றுமொரு டீசல் கப்பல் வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த வாரம் ஜூலை 18 முதல் 19 வரையிலான காலப்பகுதியில் பெற்றோல் கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மூன்று எரிபொருள் கப்பல்களுக்கு ஏற்கனவே முழுமையாக பணம் செலுத்தப்பட்டுள்ளதாக காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதுடன், மேலதிக விபரங்கள் 12:30க்கு நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)