இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பயணித்த பேருந்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் 06 சந்தேக நபர்கள் கைது!!
Close
advertise here on top
advertise here on top
happy kids fun world

இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பயணித்த பேருந்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் 06 சந்தேக நபர்கள் கைது!!


மொரவலப்பிட்டி எ‌ரிபொரு‌ள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பயணித்த குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்தில் துப்பாக்கி மற்றும் 07 தோட்டாக்களுடன் 06 சந்தேக நபர்களை அலவ்வ பொலிஸார் நேற்று (24) கைது செய்துள்ளனர்.

எஹெலியகொட, பின்தெனிய, தியஹொதெல்ல, பிலவலகான மற்றும் மடுவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் 33-55 வயதுடைய குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக கொட்டியாகும்புர பகுதியைச் சேர்ந்த நபர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து, அலவ்வ மொரவப்பிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருள் பெறுவதற்காக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

பேருந்தில் துப்பாக்கி இருந்ததை அப்பகுதி மக்கள் அவதானித்து அலவ்வ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதன்படி அலவ்வ பொலிஸார் பேருந்தை சோதனையிட்ட போது அங்கிருந்த ஒருவரிடம் இருந்து அரை தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 07 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.