
இன்று (26) காலை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளதாகவும், அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
அன்றாட சமையல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான எரிவாயுவை வழங்குவதற்கும், சிறு மற்றும் நடுத்தர தொழில்களை நடத்துவதற்கும், கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் சிரமங்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் தொடர்ந்து கூடி ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த வருடம் டிசெம்பர் 31ஆம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாட்டை போக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை லிட்ரோ நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதன் பிரகாரம் ஆகஸ்ட் 01ஆம் திகதி முதல் வரிசையில் நிற்காமல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாதவாறு செயல்திட்டங்களை மேற்கொள்ள அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். கூறினார். (யாழ் நியூஸ்)