
புதிய எரிபொருள் விநியோக முறையின் கீழ் வாகனங்களுக்கு எரிசக்தி அமைச்சு வாரத்திற்கு எரிபொருள் ஒதுக்கீட்டை ஒதுக்கியிருந்தது.
பல பதிவு செய்யப்பட்ட பயனர்கள் தங்கள் தேசிய எரிபொருள் பாஸ் பயன்பாட்டில் காட்டப்படும் ஒதுக்கீட்டில் அதிகரிப்பு குறித்து தெரிவித்துள்ளனர்.
வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீடு பின்வருமாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது:
- கார்கள் - 20 லீட்டர்
- வேன் - 20 லீட்டர்
- லாரி - 50 லீட்டர்
- முச்சக்கர வண்டிகள் - 05 லீட்டர்
- மோட்டார் சைக்கிள்கள் - 04 லீட்டர்
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு முறை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று அறிவித்தார். (யாழ் நியூஸ்)