மனைவிக்கு முத்தம் கொடுக்க முயன்றவர் மீது தாறுமாறாக தாக்குதல்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

மனைவிக்கு முத்தம் கொடுக்க முயன்றவர் மீது தாறுமாறாக தாக்குதல்!


உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி நதியில் கணவன் – மனைவி குளித்து கொண்டிருந்தபோது, மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவரை அங்கு சூழ்ந்து இருந்தவர்கள் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சரயு நதி உள்ளது. இது சரயு கங்கையின் ஏழு துணை நதிகளில் ஒன்றாக வணங்கப்படுகிறது. மேலும் ராமர் பிறந்த அயோத்தி, சரயு நதிக்கரையில் அமைந்துள்ளதால், இந்துக்களால் இது புனிதமான நதியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த நதியில் குளித்த பின்னர் கோயிலில் பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், சரயு நதிக்கரையில் கணவன் – மனைவி தம்பதியினர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, கணவன் ஆசையாக தனது மனைவிக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தில் குளித்து கொண்டிருந்தவர்கள் கணவரை தண்ணீரில் இழுத்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, கணவரை மீட்க போராடுகிறாள்.

ஆனால் அவர்கள் கணவரை தனியாக இழுத்து சென்று கன்னத்தில் பளார்..பளார் என தாக்கினர். எதற்காக தாக்குகிறார்கள் என்பது கூட தெரியாமல் கணவனும், மனைவியும் செய்வதறியாது முழித்து கொண்டிருந்தனர். 

அப்போது, கூட்டத்தில் ஒருவர் அயோத்தியில் இது போன்ற அசிங்கத்தை பொறுத்து கொள்ள முடியாது என கூறுகிறார். அதன்பின்னரே, இந்த நதியில் வைத்து தனது மனைவிக்கு முத்தம் கொடுத்ததற்காக தன்னை தாக்கினார்கள் என்பது அவர்களுக்கு புரிந்தது.

பின்னர், அந்த கும்பல் கணவன் – மனைவி இருவரையும் நதியில் இருந்து வெளியேற்றினர். 

மேலும் இது தொடர்பாக அயோத்தி காவல்துறையினரிடம் அக்கம் பக்கத்தினர் புகார் அளித்தனர். புகாரை பெற்று கொண்டு அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அனைத்தும், அங்குள்ளவர்கள் தங்கள் தொலைபேசிகளில் படம் பிடித்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மனைவிக்கு முத்தம் கொடுத்தது தப்பா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (இந்திய ஊடகம்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.