
கடந்த திங்கட்கிழமை (20) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து அவிசாவளை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விநியோகித்த குற்றத்திற்காக குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
35 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மனைவி அவிசாவளை காவல்துறையின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியை அணுகி சந்தேக நபரை பிணையில் விடுவிக்க அவருக்கு ரூ. 250,000 பணத்தை தருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒப்புக்கொண்ட குறித்த அதிகாரி, இந்த விடயம் தொடர்பில் சீதாவகபுர பொலிஸ் பிரிவுக்கு அறிவித்தார், பின்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு தகவல் அனுப்பப்பட்டது.
முன்பணமாக ரூ.150,000 இனை செலுத்துவதற்காக வந்த போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 32 வயதுடைய அவிசாவளை பகுதியைச் சேர்ந்த பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவரின் நடவடிக்கைகள் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)