கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விசேட கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விசேட கோரிக்கை!


நாட்டின் தற்போதைய நிலையில் கர்ப்பிணித் தாய்மார் பிரசவத்திற்கான வலி ஏற்படும் வரை வீடுகளில் காத்திருக்க வேண்டாம் என பிரசவ மற்றும் நரம்பியல் விசேட வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாதாரண பிரசவ முறையில் முதலாவது குழந்தையை பிரசவித்த தாய்மார், இரண்டாவது குழந்தையை பிரசவிப்பதற்கான காலம் குறைவடையக்கூடும் பிரசவ மற்றும் நரம்பியல் விசேட வைத்தியர் வித்ய விபூசன தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித்தாய்மாருக்கு பிரசவத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை, உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அவர் கோரியுள்ளார்.

இதன்மூலம் வீடுகளில் மற்றும் வெளி இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகளை பிரசவிப்பதனை தவிர்க்க முடியும்.

இதனால் தாய் மற்றும் சேய் ஆகியோரை பாதுகாக்க முடியும் என பிரசவ மற்றும் நரம்பியல் விசேட வைத்தியர் வித்ய விபூசன குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் இன்மையினால், வைத்தியசாலைக்கு செல்ல தாமதமான கர்ப்பிணித்தாய் ஒருவர் தமது மூன்றாவது குழந்தையை வீட்டில் பிரசவித்த சம்பவம் நிக்கவரட்டிய பகுதியில் நேற்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.