
பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரியில் 52,278, பெப்ரவரியில் 55,381, மார்ச்சில் 74,890, ஏப்ரலில் 53,151, மே மாதத்தில் 52,945 கடவுச்சீட்டுகள் பெறப்பட்டுள்ளன.
கடந்த வருடம் (2021) முழுவதும் 382,506 கடவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)