
எரிபொருள் கப்பல் இன்று அதிகாலை வரவிருந்ததாகவும், ஆனால் தாமதமாகி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இதனால் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் விநியோகிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஆட்டோ டீசல் கிடைக்கப்பெற்றதாகவும், நாடளாவிய ரீதியில் முழு கொள்ளளவிற்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போது மட்டுப்படுத்தப்பட்ட சுப்பர் டீசல் விநியோகம் காணப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)