
யாழ். காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் யாழ். பொலிசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் வீடொன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் பழைய உலோகங்களை சேகரிப்பதாக கூறி சேகரித்த மோட்டார் குண்டுகள், ஆர்.பி.ஜி வெடிமருந்துகள், பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட 6 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் இந்த வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், குறித்த வெடிபொருட்களை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு விற்பனை செய்வதற்கு சந்தேகநபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் அதே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)