
தற்போதைய நிலைமை காரணமாக நாட்டில் 40% முதல் 50% வரை உணவு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் எனவும், வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் கிடைக்காததும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் வானொலியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கலாநிதி பொறியியலாளர் அமில திபதுவ மேலும் தெரிவிக்கையில், நாட்டில் குறிப்பிட்ட அளவு உணவுப் பொருட்கள் நுகர்வோரிடம் உரிய முறையில் கையளிக்கப்படுவதற்கு முன்னர் விநியோகச் சங்கிலியில் அழிந்து விடுகின்றன. (யாழ் நியூஸ்)