“மன்ச்சி” சிலோன் பிஸ்கட் குழும நிறுவனர் காலமானார்!
advertise here on top
advertise here on top
happy kids fun world

“மன்ச்சி” சிலோன் பிஸ்கட் குழும நிறுவனர் காலமானார்!

சிலோன் பிஸ்கட் குழுமத்தின் (CBL) நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் மினேகா. பி விக்கிரமசிங்க காலமானார்.

இறக்கும் போது விக்கிரமசிங்கவுக்கு 86 வயது ஆகும்.

1968 இல் அவர் நிறுவிய அமைப்பின் தலைமையில் ஏறக்குறைய 48 ஆண்டுகளுக்குப் பிறகு, மினேகா விக்கிரமசிங்க சிலோன் பிஸ்கட் குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து ஜூன் 2015 இல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

“அரவணைப்பு” (CARE) திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு உயர் புரத பிஸ்கட் வழங்குவதற்கான முன்மொழிவை விக்கிரமசிங்க கல்வி அமைச்சிடம் முன்வைத்த போது சிலோன் பிஸ்கட் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது.

ரொட்டி மாவு, சோயாபீன் எண்ணெய், பால் பவுடர் மற்றும் அந்த நேரத்தில் கிடைத்த குறைந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி நிறுவனரால் பிஸ்கட் உருவாக்கப்பட்டது.

உள்ளூர் பிஸ்கட் சந்தையில் 50% இற்கும் அதிகமான பங்கைக் கைப்பற்றியதன் மூலம் உள்ளூர் சந்தையின் முன்னோடியாக மாறிய விக்கிரமசிங்க, இந்திய சந்தையில் முதன்முதலில் நுழைந்த தொழில்முனைவோர்களில் ஒருவர் ஆவார். 

இவர்களின் பிஸ்கட் வகைகள் இப்போது 55 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படுவதோடு நாட்டின் மிகப்பெரிய பிஸ்கட் மற்றும் மிட்டாய் ஏற்றுமதியாளராக காணப்பட்டு வருகின்றது.

Munchee, Ritzbury, Lankasoy, Samaposha, Tiara மற்றும் Cecil ஆகிய வர்த்தக நாமங்களின் கீழ் பிஸ்கட், சாக்லேட், சோயா, தானியங்கள், கேக்குகள், ஆர்கானிக் பழங்கள் மற்றும் தேங்காய் போன்றவற்றில் குழுவானது சந்தைத் தலைமைத்துவத்தைப் பெற்றுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.