நாட்டில் பயோ டீசல் தயாரித்து பிரதமரின் கவனத்தை ஈர்த்துள்ள 23 வயது இளைஞன்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

நாட்டில் பயோ டீசல் தயாரித்து பிரதமரின் கவனத்தை ஈர்த்துள்ள 23 வயது இளைஞன்!


பாணந்துறையைச் சேர்ந்த 23 வயதான திலின தக்ஷில என்பவருக்கு அவர் தேங்காய் எண்ணெய்யில் இருந்து உற்பத்தி செய்த பயோடீசல் மாதிரிகளை விஞ்ஞான ஆராய்ச்சிக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்புமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு நடைமுறை தீர்வாக பயோடீசலைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துமாறும் பிரதமர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

தேங்காய் எண்ணெயிலிருந்து பயோடீசல் தயாரிப்பது தொடர்பில் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். 

இதன்படி, குறித்த இளைஞரிடம் தொலைபேசியில் கலந்துரையாடிய பிரதமர், இது தொடர்பான விசாரணைகளுக்கு உதவுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் அறிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த திலின தக்ஷில, தனது தயாரிப்பு உலக தரத்திற்கு இணங்குவதை தனது தனிப்பட்ட பரிசோதனைகள் உறுதி செய்துள்ளதாகவும், பயோ டீசல் சராசரி லீற்றர் டீசலில் 10 சதவீதம் வரை செல்லக்கூடியது என்றும் கூறினார். 

பயோடீசலைப் பயன்படுத்தும்போது வாகனத்தில் இருந்து வெளிவரும் கார்பன் மோனாக்சைட்டின் அளவு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக திறமையான இளைஞன் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

எனவே, பயோடீசல் பயன்பாடு பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது என்றார்.

திலினவின் இந்த கண்டுபிடிப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், ஆய்வக அறிக்கை கிடைத்தவுடன் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்துள்ளார். 

இந்த ஆய்வக பரிசோதனை மிகவும் சிக்கலானது மற்றும் கணிசமான நேரம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.