அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் தெரிவு எதிர் வரும் 16 ஆம் திகதி மீ்ண்டும் தலைவராக முப்தி ! முஸ்லிம் சமூகம் எங்கு நோக்கி பயணிக்கின்றது?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் தெரிவு எதிர் வரும் 16 ஆம் திகதி மீ்ண்டும் தலைவராக முப்தி ! முஸ்லிம் சமூகம் எங்கு நோக்கி பயணிக்கின்றது?

இலங்கை ஜம்மியத்துல் உலமா என்பது முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காகவும் வழிகாட்டலுக்காகவும் முஸ்லிம் சமூகத்தின் மூத்த தலைவர்களால் உருவாக்கப்பட்டது.

இது சுமார் பத்துத் தசாப்தங்களாக பல்வேறு விதமான சவால்களுக்கு மத்தியில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இது சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்தின் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட முஸ்லிம் சமூக விவகாரங்களில் சட்டப்படி உரிமை பெற்ற ஒரு நிறுவனமாகும்.

பல தசாப்தங்களாக அகில இலங்கை ஜமியத்துல் உலமா தன் கடமைகளையும் பொறுப்புக்களையும் முஸ்லிம் சமூகத்திற்கு செய்து வந்துள்ளது.

இதனிடையே அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் தற்போதுதைய தலைவர் கடந்த 19 வருடங்களாக தொடர்ந்தும் பதவியில்ல் இருந்து வருகின்றார்.

ஜமியத்துல் உலமாவின் போக்கில் அதன் நிர்வாகிகளின் போக்கில் கடந்த காலங்களில் சமூகத்தில் கடும் விமர்சனம் செய்யப்படுகிறது.

இதற்கான காரணம் என்ன ?

கடந்த சில வருடங்களாக ஜமியத்துல் உலமாவின் போக்கில் பல்வேறு விதமான சமூக சிந்தனையற்ற முடிவுகளும், மார்க்கத்தை கருத்தில் கொள்ளாது, சில முதலீட்டாளர்களுக்கு ஏதுவான வகையிலான மார்க்கத் தீர்ப்புகளும்,

அரசியல்ரீதியான, அரசியல் தலைவர்களுக்கு இசைவான போக்குகளுமே இதற்கான காரணமாகும்.

ஒரு சமூகத்தின் ஆன்மீகத் தலைமை " இந்த ஜனாதிபதிக்காக அல்லாஹ்விடம் மன்றாடி னோம்"

என பள்ளிவாசளின் தூய்மையான பிம்பம் மேடையில் பகிரங்கமாக கூறுவது தலைமைத்துவத்தின் போக்க்கில் பக்கச்சார்பான அரசியலை நோக்கிச் செல்வதை தெளிவாகவே அவதானிக்க முடிந்தது.

மேலும் கடந்த காலங்களில் இவர்களால் மேற்கொள்ளப்பட்ட சில முடிவுகள். ஜனாசா எரிப்பு விடயத்தில் அரசியல் தலைவர்களை திருப்திப்படுத்தும் வகையிலான, ஜனாஸா எரிபுக்கு ஆதரவான தீர்ப்புகள்.

ஏப்ரல் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரனை குழுவில் நடந்து கொண்ட முறைமை. போன்றவற்றினால் முஸ்லிம் சமூகம் பாரிய ஒரு தலைகுனிவை சந்திக்க வேண்டி ஏற்பட்டது.

ஜனாஸா எரிப்பு சம்பந்தமாக முஸ்லிம் சமூகத்தின் சில சகோதர சட்டத்தரணிகள் வழக்காட முற்பட்ட போதிலும் ஜமியத்துல் உலமாவின் தலைவர், ஜனாஸாக்களா எரிக்கப்படுவதை நியாயப்படுத்தி முன்வைத்த கருத்து, நீதிமன்றத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக, எதிராளிகளால் முன்வைக்கப்பட்டமை எமது சமூகத்தின் தலைமையின் ஒரு துரதிஷ்ட வசமாகும் .

ஜனாசா எரிப்பு விடையத்தில் விடயத்தில் சமூகத்தில் பல்வேறுபட்ட தரப்பினரும் தீர்மானத்துக்கு எதிராக, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் மக்கள் பேராட்டங்களை நடாத்திய போதிலும், பிரச்சனைக்கு வழிவகுத்த இவர்கள் அரசுக்கு ஆதரவாக மெளனம் சாதித்தமை இவ்வாறான ஒரு தலைமைத்துவம் தேவைதானா என சந்திக்கும் அளவிற்கு துப்பாக்கியமான நிலைக்கு மக்களை ஆளாக்கியது.

முஸ்லிம் சமூகம் கடந்த இரு தசாப்தங்களில் இயக்கங்களாகவும் அமைப்புக்களாகவும் பிரிந்து நிற்பதற்கு ஆன்மீக தலைமைத்துமே முக்கிய காரணமாகும்.

மார்க்க விடயத்தில் கருத்து முரண்பாடுகள் இருந்தபோதிலும், முஸ்லிம் சமூகம் என்ற வகையில் தலைமைத்துவத்தினால் அரவணைக்க படவில்லை.

தலைமைத்துவமானது தமது பதவிக்காகவும் சுயலாபங்களுக்காகவும் சமூகத்தை பல கூறுகளாகப் பிரித்தாளும் வழிமுறையை கைக்கொண்டது.

மேலும் முஸ்லிம் சமூகத்தை, விசாரணைக் குழுவில் தலை குனிய வைத்த வட்டிலாப்ப விவகாரம் சட்டத்துறையில் முன்னணியில் நிற்கும் மூத்த முஸ்லிம் சட்டத்தரணிகளின் மரியாதைக்கு பேரிடியாக விழுந்தது.

இதனைத் தொடர்ந்து மூத்த முஸ்லிம் சட்டத்தரணிகள் தலைமைத்துவம் மாற வேண்டும் என்ன வலுக்கட்டாயப்படுத்திய போதிலும் அவர்களது ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை.

இதனால் படித்த பொதுமக்கள் உட்பட அனைவரும் தலைமைத்துவத்தின் மீது வெறுப்படைந்தனர்.

மேலும் சமூகத்தில் இவர்கள் மீது நிலவிய ஊழல் குற்றச்சாட்டுகள், மற்றும் இவர்கள் தன்னகப் படுத்திக் கொண்ட சொத்துக்கள், தெளிவான வட்டியை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டமை சம்பந்தமாக சமூகத்திற்கு எந்தவிதமான தெளிவுகளும் கிடைக்கவில்லை.

எனவே கடந்த காலங்களில் இவர்களின் மீது மக்களின் வெறுப்பு மேலும் அதிகமானதோடு , இலங்கை வரலாற்றில் இதுவரை எந்த ஆன்மீகத் தலைமையும் விமர்சிக்க படாத அளவுக்கு ஒரு கேவலமான நிலைக்கு விமர்சிக்கப்பட்டன.

இவ்வாறன ஒரு நிலைமையில் அகில இலங்கை ஜமீயத்துல் உலமா அதன் உரிய நோக்கத்திற்காக பாதுகாக்கப்பட வேண்டும்.

பல்வேறுபட்ட அறிஞர்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டும். ஜம்மியத்துல் உலமா பல்வேறு துறையிலலான துறைசார் நிபுணர்களை உள்ளடக்கியதாக பன்முக படுத்தப்பட வேண்டும் என்ற கோஷம் நாடு முழுவதிலும் எழ ஆரம்பித்தது. இதற்கும் தலைமை செவி சாய்ப்பதாக தெரியவில்லை.

நிலமை இவ்வாறிருக்க அண்மையில் ஜமீயாவின் யாப்பில் மாற்றம் செய்யப்படவேண்டும் என முஸ்லிம் சமூகத்தின் முத்த வழக்கறிஞர்கள் முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி நல்ல பல பல்வேறு விதமான சட்ட ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் முன் வைத்ததாக அறியமுடிகின்றது.

மேலும் இம் முன்மொழிவுகள் அடுத்த தலைவர் தெரிவுக்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.

இதில் முக்கியமானவை ஒரு தலைவர் ஒருமுறை மட்டுமே பதவியில் இருக்க வேண்டும். தொடர்ந்தும் பல வருடங்களுக்கு பதவியில் இருக்க முடியாது இவ்வாறு தலைமைத்துவத்தை மட்டுப்படுத்துவதால் தற்போது எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பிழையான தீர்மானங்கள், மற்றும் ஊழல்களில் இருந்து இவ்வமைப்பை பாதுகாக்க முடியும் என்ற நல்ல பல ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளனர்.

ஆனால் இவ் ஆலோசனையானது இவர்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளதோடு அடுத்த தலைவர் தெரிவிக்க முன் அமுல்படுத்த படுத்துவதாக தெரியவில்லை.

அவ்வாறாயின் அடுத்த தலைமைத்துவத்திற்கு தற்போதைய தலைவர் மீ்ண்டும் தெரிவு செய்யப்படுவாரா என்ற பாரி ஒரு சந்தேகம் எழுகின்றது.

தற்போதைய தலைமைத்துவம் இதை ஏற்று ஒதுங்குவதாக இருந்தால், மூத்த அறிஞர்களின் இவ் ஆலோசனைகளை தலைமேல் வைத்து நிறைவேற்றி இருக்கவேண்டும்.

தலைமையின் இவ்வாறான தான்தோன்றித்தனமான நிலைமை கண்டிக்கப்பட வேண்டும். கடந்த கால கசப்பான தீர்மானங்களையும் தவறுகளையும் முதற்கொண்டு தற்போது உள்ள தலைமைத்துவம் இத்தோடு மாறவேண்டும்.

ஆரம்பகாலம் தொட்டு முஸ்லிம் படித்த அறிஞர்கள், தலைமைகள் சமூகத்திற்கு அவ்வப்போது வழங்கிவந்த ஆலோசனைகளும் வழிகாட்டல்களுமே இன்று சகல உரிமைகளுடனும் முஸ்லிம் சமூகம் இலங்கையில் வாழ்வதற்கு பிரதான காரணமாகும்.

இந்நிலையில் மூத்த அறிஞர்களின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் ஒரு தனி மனிதனின் பதவி ஆசைக்காக நிராகரிக்க படுவது தடுக்கப்பட வேண்டும்.

ஒரு நிறுவனத்தின் தலைமைத்துவம் தொடர்ந்தும் பிழைகளையும், தவறுகளையும் செய்து வரும் போது அப்பதவிக்கு அத்தலைமைத்துவம் பொருத்தமானதாக இல்லை என்பதே உண்மை.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அந்நிறுவனத்தின் எதிர்காலம் இருள் மயமான தாகவே அமையும் என்பதே உண்மை.

கடந்த கால சவால்களையும், எதிர்வரும் சவால்களையும் நோக்கும்போது அவற்றை தற்போதைய தலைமை துவதுவத்கினால் சமாளிக்க முடியாது என்பதை கடந்தகால நிகழ்வுகளின் மூலம் நாம் கண்டோம்.

மேலும் தற்போதைய தலைமைத்துவத்தைவிட மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற சிறந்த தைரியமான சவால்களை எதிர் கொள்ளக்கூடியவர்கள் சமூகத்தில் உருவாகியுள்ளனர். இவ்வாறானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமைத்துவத்தை சீராக நடத்தும் பணி தகுதி வாய்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பது முஸ்லிம் சமூகத்தின் ஒரு பாரிய சொத்தாகும். இது சுயநலவாதிகளின் தன்னலம் கொண்ட நடவடிக்கைகளினால் தூர்ந்து போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாடு தற்போது உள்ள நிலைமையில் இவ்வாறான ஒரு அமைப்பை உருவாக்குவதென்பது ஒரு கனவாகும் எனவே இது கட்டிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

அகில இலங்கை ரீதியாக கிளைகளைக் கொண்டிருக்கும் இன் நிறுவனமானது சமூக பொருளாதார கல்வி போன்ற துறைகளில் பன்முகப் படுத்தப்பட்டு துறை சார்ந்தவர்களை உள்வாங்குதல் மூலம் சமூகத்திற்கான இதன் சேவைகள் விரிவாக்கப்பட வேண்டும்.

எனவே தற்போதைய தலைமைத்துவம் முஸ்லிம் சமூகத்திலும் இன் நிறுவனத்திலும் கரிசனை கொண்டிருந்தால் பதவியில் இருந்து விலகி வரும் சந்ததிக்கு வாய்ப்பளித்து மரியாதையாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கையின் வீரன் என்ன புகழப்பட்ட அரசியல் தலைவர்கள் அண்மைக் காலங்களில் மக்களால் விரட்டப்பட்டு ஓடி ஒளிந்து சர்வதேசத்தில் முகம் கொடுக்க முடியாமல் சீரழிந்து போன வரலாறுகளை நாம் கண்டோம்.

எனவே முஸ்லிம் ஆன்மீக தலைமைகள் தலைமைகள் இவ்வாறான நிலைமைக்கு ஒரு நிலைமைக்கு ஆளாகாமல் தமது தொடர்ச்சியான பதவி ஆசையை கைவிட்டு முஸ்லிம் சமூகத்தின் கௌரவத்தையும் நற்பெயரையும் பாதுகாத்து சமூகத்திலும் எதிர்கால சந்ததியையும் அக்கறை கொண்டு தகுதி உள்ளவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி இத்தோடு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் முஸ்லிம்களின் உரிமைகளையும் சதந்திரத்தையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.

( பேருவளை ஹில்மி )

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.