எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முகாமையாளர்கள் தமது எண்ணெய் கையிருப்புக்கள் எப்பொழுது வருகின்றன என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, எரிபொருள் வரிசையில் நிற்கும் மக்களுக்கு அந்தத் தகவல்களை மிகவும் துல்லியமாக வழங்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)