லிட்ரோ லங்கா நிறுவனம் நாளையும் (25) சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளது.
12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் நாளை விநியோகிக்கப்படாது என முதன்மை எரிவாயு வழங்குநர் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் இன்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளது.
எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்காக வரிசையில் நிற்க வேண்டாம் என அந்நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
3500 மெட்ரிக் தொன் திரவப் பெற்றோலிய வாயு (LPG) ஏற்றுமதி வியாழக்கிழமை இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது கடும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் பல மணிநேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)