கொழும்பில் திங்கட்கிழமை (09) ஏற்பட்ட அமைதியின்மையின் போது நீர்கொழும்பில் உள்ள பல சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து இலங்கை ஹோட்டல் சங்கிலியான அவென்ரா ஹோட்டல்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நீர்கொழும்பில் உள்ள குறித்த ஹோட்டல் சங்கிலிக்கு சொந்தமான Avenra Gardens, Avenra Bayfonte, Avenra Dynasty, Avenra Travels மற்றும் Avenra Wok சொத்துக்கள் மீது கோபமடைந்த கும்பல் தாக்கி எரித்துள்ளது.
இரு தசாப்தங்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருவதாக குறித்த அறிக்கையில் அவென்ரா ஹோட்டல்ஸ் தெரிவித்துள்ளது.
தமக்கு அரசியல்வாதிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், தனது வணிக வாழ்க்கை முழுவதும் சுதந்திரமாக இருந்து வருவதாகவும் ஹோட்டல் சங்கிலி மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
அவென்ரா ஹோட்டல்கள், திருமணங்கள் மற்றும் பிற விழாக்களுக்காக முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களை மேலும் தகவலுக்கு அதன் நிர்வாகத்தை அழைக்குமாறு அறிவுறுத்தியது. (யாழ் நியூஸ்)