
திணைக்களத்திற்குச் செல்வதற்கு முன் தனக்கான நேரத்தினை ஒதுக்கிக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் நேர ஒதுக்கீடுகள் இன்றி சேவைகளைப் பெறுவதற்கு வருகை தருவதை அவதானிக்க முடிந்தது.
கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளுக்கு நேர ஒதுக்கீடு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இனிமேல் சேவைகள் வழங்கப்படும் என்பதை வருந்தத்தக்க வகையில் அறிவிக்க வேண்டும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேர ஒதுக்கீடு செய்யாமல் வருகை தரும் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தவிர்க்க முடியாதது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.immigration.gov.lk/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று அல்லது 070-7101-060 என்ற தொடர்பு இலக்கத்தின் வாயிலாக நேரங்களை ஒதுக்கிக்கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பொது வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை கடவுச்சீட்டு சேவைகள் வழங்கப்படுகின்றன.