
ரஷ்ய கூட்டமைப்பு இந்த செயல்முறையை ஆதரிப்பதாக ரஷ்ய தூதரகத்தின் முதல் செயலாளர் அனஸ்தேசியா ஹத்லோவா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறிய அனஸ்தேசியா ஹத்லோவா, இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் இலங்கையின் எரிசக்தி அமைச்சருக்கும் இடையில் இந்த விடயம் தொடர்பில் சந்திப்பு இடம்பெற்றதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ளார்.
இலங்கை தனது எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியில் பல நாடுகளை அணுகியுள்ளது.
எரிபொருள் நெருக்கடியால் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தினமும் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். (யாழ் நியூஸ்)