ஊரடங்கின் பின்னர் மின்வெட்டு நேரம் நீடிக்கப்படும்?
advertise here on top
advertise here on top

ஊரடங்கின் பின்னர் மின்வெட்டு நேரம் நீடிக்கப்படும்?


ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால் தற்போதைய மின்வெட்டு ஏழரை மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் எரங்க குடா ஹேவா தெரிவித்துள்ளார்.

இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

'எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்ட மின்வெட்டு இன்னும் தீர்க்கப்படவில்லை.

வெளிநாடுகளில் இருந்து அவ்வப்போது கொண்டுவரப்படும் எரிபொருட்கள் மூலம் இப்பிரச்சினைக்கு தற்காலிக தீர்வுகள் கிடைத்தாலும் நிரந்தரத் தீர்வு தற்போது வரை எட்டப்படவில்லை' என்றார்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.