ஜனாதிபதியின் தலையீடு; சமையல் எரிவாயு விடுவிக்க இணக்கம்!
advertise here on top
advertise here on top

ஜனாதிபதியின் தலையீடு; சமையல் எரிவாயு விடுவிக்க இணக்கம்!


லிட்ரோ எரிவாயுவை இன்று மற்றும் நாளை வீட்டு உபயோகத்திற்காக விடுவிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

 “ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு இணங்க கொழும்பு மற்றும் கம்பஹாவில் இன்றும் நாளையும் தினமும் 15,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என லிட்ரோ தலைவர் தெரிவித்தார். 

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு இல்லை என்றும், தொழிற்சாலை தேவைகளுக்கு மட்டுமே எரிவாயு வெளியிடப்படும் என்றும் லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று அதிகாலை அறிவித்தது.

“கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் 15,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் புதன்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 80,000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்” என லிட்ரோ நிறுவன தலைவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.