பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாகனங்களில் அழைத்து வரப்பட்டவர்களின் ஒரு குழுவினரே இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.
அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் அங்கு பதற்றமான நிலைமை நிலவுகிறது.
பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகக்கூடாதென தெரிவித்து பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலர் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்..
பின்னர் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் ‘கோட்டா கோ கம’ பகுதிக்கு ஆக்ரோசமாக முன்னேறி சென்றனர்.
கோட்டா கோ கம போராட்டக்களத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட பொதுஜன பெரமுன குண்டர்கள் காலிமுகத்திடல் சுற்று வட்ட பகுதியில் பொலிசாரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
எனினும், ஒரு பகுதியினர் கோட்டா கோ கம போராட்டக்களத்திற்குள் நுழைந்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், கூடாங்களையும் அடித்துடைத்தனர்.
பொலிசார் நிலைமையை கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தினர்.
இதுவரை 09 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.