
அவர்களிடம் இருந்து 47,000 அமெரிக்க டொலர்கள் காணப்பட்டதாகவும், இதன் மதிப்பு ரூ 71.55 மில்லியன் ஆகும்.
கைது செய்யப்பட்ட இருவரும் கிருலப்பனை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல பாகங்களிலும் உண்டியல் முறையில் டொலர் பரிமாற்றங்கள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெறும் தகவல்களினால், எதிர்காலத்தில் இவ்வாறான சட்டவிரோதச் செயல்கள் தொடர்பில் மேலதிக சோதனைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)