கடவுச்சீட்டு வழங்கல் (ஒரு நாள் சேவை தவிர்த்து) இன்று (09) முதல் வழமையான சேவைகள் ஆரம்பிக்கப்படும்.
இதன்படி, சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு பெறுவதற்கு மே 5, 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் நேரம் ஒதுக்கி மே 5 ஆம் திகதி சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து திணைக்களத்திலிருந்து ஒரு எண் அல்லது முத்திரையினை பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரம் இன்று விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே 10 முதல், உங்கள் கடவுச்சீட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்வது கட்டாயமாகும். (யாழ் நியூஸ்)
மே 10 முதல், உங்கள் கடவுச்சீட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்வது கட்டாயமாகும். (யாழ் நியூஸ்)