
எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் அதனை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால், ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஏற்கனவே தீர்மானித்திருத்ததாகவும் ஜனாதிபதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் கடிதத்தில் சில நிபந்தனைகள் உள்ளதாகவும் அவை இன்னும் கட்சித் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார். (யாழ் நியூஸ்)
