இலங்கையை மீண்டும் பலப்படுத்துவதற்காக புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“மிகவும் கொந்தளிப்பான நேரத்தில் எமது நாட்டை வழிநடத்தும் சவாலான பணியை முன்னெடுத்துச் செல்லவுள்ள புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எனது நல்வாழ்த்துக்கள். இலங்கையை மீண்டும் வலிமையாக்க அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)