
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி 'GO HOME GOTA' என கோஷங்களை எழுப்பியவாறு உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
அரசாங்கத்தின் பிரதம உறுப்பினரான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து பாராளுமன்றம் இன்று 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவின் உரைக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறுக்கிட்டு பதிலளித்ததை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய மாட்டார் என பாராளுமன்றத்தில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் அறிவித்தார்.
அவரது பதில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே வாக்குவாதத்தை விளைவித்தது, பல ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது ஜனாதிபதியை இராஜினாமா செய்யுமாறு பாராளுமன்ற அறைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்றம் மீண்டும் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
VIDEO : SJB MPs are protesting in Parliament chambers holding placards. @sjbsrilanka #lka #SriLanka pic.twitter.com/euq3Bgt9u1
— Rangana Shamil Fernando (@ranganashamil) April 6, 2022