இன்னும் 24 மணிநேரத்துக்குள் இடைக்கால அரசாங்கம் நிறுவப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் உயர்மட்டத்தில் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அறியமுடிகின்றது.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக பிரதமர் இன்று மாலை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.
பிரதமர் இன்று இரவு ஜனாதிபதியை சந்தித்ததன் பின்னர் அரசாங்கம் தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமத்தில் இணைவதை தவிர்த்துக்கொள்ளவும்.