ஏப்ரல் 04ஆம் திகதி முதல் மாணவர்கள் பாடசாலைக்கு வர வேண்டுமா இல்லையா என்பதை பாடசாலை அதிபர்களே முடிவு செய்யலாம் என கல்வி அமைச்சு கூறுகிறது.
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் தலைமையாசிரியர்கள் ஏப்ரல் 04 முதல் 08 ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறுவதால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீண்ட மின்வெட்டு காரணமாக ஏப்ரல் 04ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பாடசாலை விடுமுறையை பிரகடனப்படுத்துமாறு கல்வி அமைச்சுக்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது.
எனினும், ஏப்ரல் 09 முதல் 17 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமத்தில் இணைவதை தவிர்த்துக்கொள்ளவும்.