
"பொதுமக்களின் குரல்களைப் புறக்கணித்து, தொடர்ந்து ஆட்சியில் இருக்க அரசாங்கம் முடிவெடுத்தால், SLPP இன் பலர் உட்பட 50 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருப்பார்கள்" என்று அவர் கூறினார்.
உள்ளூர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாளை (05) பாராளுமன்றம் கூடும் போது, அரசாங்கம் 113 ஆசனங்களில் பெரும்பான்மையை இழக்கும் என்பதை மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதி செய்வார்கள் என அவர் மேலும் எச்சரித்தார்.
அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தமது இராஜினாமாக்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்ததையடுத்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பாக நாட்டின் பல பகுதிகளில் பெரும் மக்கள் எதிர்ப்புக்கள் வெடித்துள்ளதால், அமைச்சரவை பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதியை இராஜினாமா செய்யுமாறு கோரி, வார இறுதியில் அரசாங்கத்தினால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும், பொதுமக்களின் எதிர்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன.
நேற்று பல பிரதேசங்களில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டதுடன், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், மாலைதீவு உள்ளிட்ட பல நாடுகளில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களும் இலங்கை மக்களுடன் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
✅ Join our WhatsApp Group:
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதைதயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்.
https://chat.whatsapp.com/KMw2Kmh38IJ1IwPTNy27bT