தற்போது நாட்டில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களும் அவை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் ஜம்இய்யாவின் பெயரில் பரப்பப்பட்டு வரும் பிழையான செய்திகளும் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
advertise here on top
advertise here on top

தற்போது நாட்டில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களும் அவை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் ஜம்இய்யாவின் பெயரில் பரப்பப்பட்டு வரும் பிழையான செய்திகளும் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டதாக சில பொய்யான செய்திகள் தொடர்ந்தும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. அத்தகைய உறுதிப்படுத்தப்படாத செய்திகளை எவரும் நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என ஜம்இய்யாவின் தலைமையகம் வேண்டிக் கொள்கிறது.

பொதுமக்களுக்கான ஜம்இய்யாவின் சகல அறிவித்தல்களும் அதன் உத்தியோகபூர்வ இணையதளத்திலும் (www.acju.lk) உத்தியோகபூர்வ சமூக ஊடகங்களிலும் வெளியிடப்படுகின்றன என்பதை சகலருக்கும் அறியத் தருகிறோம். எனவே ஜம்இய்யாவின் செய்திகளை அதனது உத்தியோகபூர்வ இணையதளத்திலும் உத்தியோகபூர்வ சமூக ஊடகங்களிலும் பார்வையிட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் பொதுமக்களுக்கான ஜம்இய்யாவின் அறிவித்தல்கள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும் ஜம்இய்யாவின் உத்தியோகபூர்வ இணையதள இணைப்பு ஊடாகவே தற்போது பகிரப்பட்டு வருகின்றன என்பதையும் ஜம்இய்யாவின் உத்தியோகபூர்வ கடிதத் தாள்களில் (Letter Head) வெளியிடப்படுவதில்லை என்பதையும் அறியத்தருகின்றோம்.

இவ்வாறு அபாண்டங்களை பரப்பி, தவறான மற்றும் பாவமான செயல்களில் ஈடுபட்டு, மக்களுக்கு பிழையான செய்திகளை கொடுக்க முனைபவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.

'முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.' (49: 06)

ஆகவே, மேற்படி அல்குர்ஆன் வசனத்திற்கமைய வதந்திகளையும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் பரப்புவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு ஜம்இய்யா சகலரையும் வேண்டிக் கொள்கிறது.

- அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.