
திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் 04 மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள சவூதி தூதரகத்தின் பிரதித் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்து சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவரிடமும் கலந்துரையாடி இது தொடர்பில் அவர்களின் தனிப்பட்ட அவதானங்களை கோரியுள்ளனர்.
கொழும்பில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரகம், இந்த ஆண்டு சவூதி அரேபியா அரசாங்கம் 50 மெட்ரிக் டன் பேரிச்சம்பழங்களை மட்டுமே நன்கொடையாக வழங்கும் என்றும் ஜித்தாவிலிருந்து இருந்து ஏப்ரல் 6ம் திகதி அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளது. இது கொழும்பு துறைமுகத்தை அடைய 03 வாரங்கள் எடுக்கும் மேலும் முகவருக்கு சரக்குகளை விடுவிக்க மேலும்2 - 3 நாட்கள் தேவைப்படும்.
முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், 300 - 400 மெட்ரிக் டன்கள் நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட 2544 பள்ளிவாசல்கள் மூலம் விநியோகிக்க கோரியது. எவ்வாறாயினும், இந்த ஆண்டுமிகவும் குறைவான அளவு, (50 மெட்ரிக் டன்) பேரீச்சம்பழங்கள் மட்டுமே ரமழான் மாதத்தின் 4வது வாரத்தில் இலங்கைக்கு வரும் என்று சவூதி அரேபியா தூதரகம் கூறியுள்ளது.
முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் லிபியா, குவைத், ஈரான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளின் தூதரகங்களுக்கும் பேரித்தம் பழங்கள் வழங்குமாறு கோரி அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறது. பேரித்தம்பழங்கள் நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெறுவதை பொறுத்த்து உடனடியாக செய்யப்பட்ட பள்ளி வாசல்களுக்கு அவை விநியோகிக்கப்படும்.
பதிவு எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளின் காரணமாக பேரித்தம் பழங்கள் விநியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இம்முறை நன்கொடையாக நாங்கள் பெறும் பேரித்தம்பழங்களின்அளவு கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருக்குகின்றது.
ஊடகப் பிரிவு முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம்