
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகி புதிய அரசாங்கத்தை அமைப்பார் என உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் பசில் ராஜபக்ச அமைச்சராக இருக்கமாட்டார் எனவும், நிதி அமைச்சராக வேறொருவர் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய அரசாங்கம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களை மட்டுமே கொண்டிருக்கும் மற்றும் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை நாட்டை ஆட்சி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமத்தில் இணைவதை தவிர்த்துக்கொள்ளவும்.