24 புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

24 புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!


இன்று (18) பிற்பகல் 24 புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அத்துடன், இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, பியங்கர ஜயரத்ன ஆகியோர் தொடர்ந்தும் அவர்கள் வகித்த இராஜாங்க அமைச்சு பதவிகளில் நீடிப்பார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்று (18) முற்பகல் 17 அமைசர்கள் பவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தனர்.

வெளிவிவகார அமைச்சரவை அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

அந்த வகையில் பிரதமர் உள்ளிட்ட 20 பேரைக் கொண்ட அமைச்சரவை அமைச்சர்கள்,  ஜீ.எல். பீரிஸ் தவிர்ந்த 25 பேரைக் கொண்ட இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடங்கிய அரசாங்கம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

பதவிப்பிரமாணம் செய்து கொண்ட புதிய இராஜாங்க அமைச்சர்கள்.

1. ஜீ.எல். பீரிஸ் - பாதுகாப்பு

2. ரோஹண திஸாநாயக்க - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்

3. அருந்திக பெனாண்டோ - பெருந்தோட்ட கைத்தொழில்

4. லொஹான் ரத்வத்த - நகர அபிவிருத்தி

5. தாரக பாலசூரிய - வெளிவிவகார

6. இந்திக அநுருந்த - வீடமைப்பு

7. சனத் நிசாந்த - நீர் வழங்கல்

8. சிறிபால கம்லத் - மகாவலி

9. அநுராத ஜயரத்ன - நீர்ப்பாசன

10. சிசிர ஜயகொடி - சுதேச வைத்தியம்

11. பிரசன்ன ரணவீர - கைத்தொழில்

12. டீ.வி. சானக - சுற்றுலா மற்றும் கடற்றொழில்

13. டீ.பீ. ஹேரத் - கால்நடை வளம்

14. கே. காதர் மஸ்தான் - கிராமிய பொருளாதார பயிர்ச்செய்கை மற்றும் ஊக்குவிப்பு

15. அசோக பிரியந்த - வர்த்தகம்

16. ஏ. அரவிந்த்குமார் - தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

17. கீதா குமாரசிங்க - கலாசார மற்றும் மேடைக்கலை

18. குணபால ரத்னசேகர - கூட்டுறவு சேவை விற்பனை அபிவிருத்தி மற்றும் நுர்வோர் பாதுகாப்பு

19. கபில நுவன் அத்துகோரள - சிறு ஏற்றுமதி பயிர்கள் அபிவிருத்தி

20. வைத்தியர் கயஷான் நவனந்த - சுகாதார

21. கலாநிதி சுரேன் ராகவன் - கல்விச் சேவை மற்றும் மறுசீரமைப்பு

22. டயனா கமகே - போக்குவரத்து

23. சீதா அரம்பேபொல - கல்வி மற்றும் தொழில்நுட்பம்

24. விஜித பேருகொட - துறைமுகங்கள் மற்றம் கப்பற்றுறை

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.