இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாய சமூகத்திற்கு தேவையான நனோ உரங்களை கையிருப்பில் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஒரு பில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், அது நேற்று (17) முதல் செயற்படுவதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடனை வழங்குவதற்கு எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை எனவும் மூன்று வருடங்களின் பின்னர் கடன் தவணைகள் மீளச் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)