"வெட கரன அபே விருவா" பாடலை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை காவல்துறை மறுத்துள்ளது.
"வெட கரன அபே விருவா" எனும் பாடலை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலைதளங்களில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
சமீப காலங்களில் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 2019 ஜனாதிபதித் தேர்தல் தீம் பாடலை எரிவாயு வரிசைகளிலும், எரிபொருள் வரிசைகளிலும் பாடி மகிழ்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், இந்த பாடலை தவறாகப் பயன்படுத்தி ஜனாதிபதியை அவமதிக்கும் நோக்கத்தில் செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவ்வாறான அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)