நேற்று (05) முதல் அமுலாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலுக்கு அமைய கோவிட் தொற்று உறுதியாகி 7 நாட்களுக்கு பின்னர் மரணிப்போரது மரணம் கோவிட் மரணமாக கருதப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த மரணங்களின் இறுதி கிரியைகளை தனிமைப்படுத்தல் விதிகளில் இன்றி சாதாரண முறையில் முன்னெடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கோவிட் தொற்றால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை அரசாங்கத்தினூடாக மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.