நாளையும் (08) நாடு முழுவதும் பிராந்திய மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, E மற்றும் F வளையங்களில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஐந்து மணி நேரமும், மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
ஏனைய வளையங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இரண்டு மணி நேரமும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒரு மணி நேரமும் மின்வெட்டு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)