எரிபொருளை விநியோகிக்கும் தனியார் டேங்கர் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!
advertise here on top
advertise here on top

எரிபொருளை விநியோகிக்கும் தனியார் டேங்கர் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருளை விநியோகிக்கும் தனியார் டேங்கர் (பவுசர்) உரிமையாளர்கள் இன்று (15) நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.


இலங்கை பெற்றோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கத்தின் (SLPPTOA) இணைச் செயலாளர் சாந்த சில்வா, இன்று (15) மாலை கூடிய சங்கத்தின் மத்தியக் குழுவில் வைத்து, CPC யின் அதிகாரிகள் பதிலளிக்கத் தவறியதன் காரணமாக இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக தெரிவித்தார். 


அதேநேரம், எரிபொருள் விநியோகத்திற்கான போக்குவரத்து கட்டணத்தை 60% அதிகரிக்குமாறு SLPPTOA யினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


CEYPETCO எரிபொருள் விலை அதிகரிப்பினால் போக்குவரத்துச் செலவுகள் 60% அதிகரிப்பைக் கணக்கிடுவதற்கு எரிபொருள் போக்குவரத்து சூத்திரம் திருத்தப்பட வேண்டுமென சங்கம் கோரியுள்ளது.


எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் லூப்ரிகண்டுகள் மற்றும் டொலரின் அதிகரிப்பு போன்ற பல காரணிகளின் காரணமாக போக்குவரத்து கட்டணத்தை 60 வீதத்தால் அதிகரிக்குமாறு தொழிற்சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார்.


தொழிற்சங்க பிரதிநிதியின் கூற்றுப்படி, தற்போது CPC எரிபொருள் விநியோகத்திற்காக சுமார் 800 தனியார் டேங்கர்களைப் பயன்படுத்துகிறது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.