
எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்த முடியாதுள்ளது.
இதனால், எரிவாயு கிடைக்காமையால் விநியோகத்தை இடைநிறுத்த உள்ளதாக லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டொலர் நெருக்கடியால், நாணயக் கடிதங்களை விடுவிக்க முடியாமையால், 3,500 மெற்றிக் டன் எரிவாயு தாங்கிய கப்பலுக்கு கொடுப்பனவை செலுத்த முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாணயக் கடிதங்களைத் திறக்க முடியாமையால், லாப்ஃஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர் சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தி இருந்தது.
இந்நிலையில், கையிருப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அத்தியாவசிய பொருளாதார நடவடிக்கைகளுக்கும் எரிவாயு விநியோகிப்பதை இடைநிறுத்தி வேண்டி ஏற்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.