அதேவேளை, இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை சுமார் 1400 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வட்டி விகிதங்கள் உயரும் என்று கூறிய அவர், அரசாங்கத்தால் வழங்கப்படும் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் மீதான வட்டி விகிதங்கள் மேலும் 400 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அவர் நிலைமையை அறிந்திருப்பதாகவும், மாற்று விகிதங்கள், வரி அதிகரிப்பு மற்றும் ஊக்கக் குறைப்பு போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களிடமிருந்து நிதி உதவியைப் பெறுவதாகவும் கூறினார். (யாழ் நியூஸ்)