இந்த வாகனங்களுக்கு எரிபொருள் கிடைக்காதமையினால் குப்பை அள்ளும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்து நிற்பதால் குப்பைகளை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மேல்மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபையானது நாளாந்தம் சுமார் 500 மெற்றிக் தொன் குப்பைகளை சேகரிக்கிறது மற்றும் அதனை அகற்றுவதற்கு சுமார் 80 லொறிகளை ஈடுபடுத்துகிறது. (யாழ் நியூஸ்)