அத்தியாவசிய விநியோக வலையமைப்பை மேம்படுத்தும் பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைபடும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, சனிக்கிழமை (05) இரவு 08 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (06) காலை 10 மணி வரை 14 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த காலப்பகுதியில் கொழும்பு 7, 8, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வள சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு 02, 03 மற்றும் 11 பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் வழங்கப்படவுள்ளது (யாழ் நியூஸ்)