அதிகாரி தனது உத்தியோகபூர்வ சீருடையுடன் செருப்புகளை அணிந்து கொண்டு போக்குவரத்து கடமையில் ஈடுபட்டது கேமராவில் சிக்கியது.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தரால் தடுத்து நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மற்றுமொரு அதிகாரியுடன் இணைந்து அந்த அதிகாரியின் உடையை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகள், பொலிஸ் சார்ஜென்ட் அவரை வீடியோ பதிவு செய்ததற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதையும் காட்டுகிறது.
அவரை சேவையிலிருந்து இடைநிறுத்தியதுடன், குறித்த அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையையும் பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. (யாழ் நியூஸ்)