உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைன் ராணுவத்திற்கும் பெரும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அந்த நாட்டின் ஜனாதிபதி Volodymyr Zelenskyy உருக்கமான வீடியோ பதிவை ஒன்றை வெளிட்டுள்ளார்.
அதில், நம் நாட்டின் டான்பாஸ் பகுதியின் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி புதின் இன்று காலை உத்தரவிட்டுள்ளார். இதன் விளைவாக ரஷ்ய ராணுவம் நமது நாட்டு ராணுவம் மற்றும் எல்லை கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
நாட்டின் பல பகுதிகளில் வெடிகுண்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் உக்ரைனில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்படுள்ளது என தெரிவித்துள்ளார்.
இன்று காலை உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy, அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுடன் தற்போதைய நிகழ்வுகள் பற்றி தொலைபேசியில் உரையாடியதில், அவர் உலக நாடுகளின் ஆதரவை உக்ரனுக்கு கண்டிப்பாக பெற்றுத்தருகிறேன் என உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைன் மக்களுக்கு தெரிவித்துள்ள அறிவிப்பில், மக்கள் அமைதியுடன் அவர்களுது வீட்டிற்குள் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு எதிராக நமது அரசு மற்றும் ராணுவம் முழுமூச்சுடன் போராட தயாராக இருப்பதாகவும், நமது நாட்டை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ராணுவம் மேற்கொண்டு வருவதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக எவ்வளவு பெரிய தடைகள் வந்தாலும் அதை துணிந்து எதிர்கொள்ளவோம் என உக்ரைன் மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
Ukraine's President Volodymyr Zelenskyy has declared martial law, urging citizens to not panic as Russia launched military strikes.
— LBC (@LBC) February 24, 2022
Follow the latest live ➡️ https://t.co/KPxXXGfvYF pic.twitter.com/7nTQhgeNlg