 
  
தனமல்வில - வெல்லவாய வீதியில் தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலஹருவ சந்தியில் அமைந்துள்ள மொத்த காய்கறி விற்பனை நிலையத்தினுள்ளேயே  கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர்.
துப்பாக்கி மற்றும் வாள்களுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள், உரிமையாளரை மிரட்டி பணம் மற்றும் உரிமையாளர் அணிந்து இருந்த  தங்க செயினை  கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று கொள்ளையர்களால் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் கடையில் இருந்த ஐந்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் கடை உரிமையாளர் அணிந்திருந்த தங்க நகையை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் தனமல்வில பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

