 
  
கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திர ஜயசூரிய மூன்று மாதங்களுக்கு பயணத்தடையை நீக்கியதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் கடவுச்சீட்டை விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

