குறித்த சம்பவம் தொடர்பில் அவ்வாலயத்துடன் தொடர்புடைய 29, 25, 41, 55 வயதுடைய 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் மூவர் கடந்த வாரம் புதன்கிழமை (02) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 55 வயதான பிரான்சிஸ் முனீந்திரன் மற்றும் அவர் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய கைதான பிரதான சந்தேகநபர் என தெரிவிக்கப்படும் ஓய்வு பெற்ற வைத்தியர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த ஆலயத்தின் பணியாளரான பிரான்சிஸ் முனீந்திரனை பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடந்த வெள்ளிக்கிழமை நேரில் சென்று சந்தித்து நலன் விசாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

