தாம் சிலுவையில் அறையப்பட்டாலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாம் எச்சரிக்கப்படவில்லை இன்ற விடயத்தில் உறுதியாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் உள்ள தேவாலயத்தில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு முன்னர் எச்சரிக்கப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக தெரிவித்தார்.
“தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கப்பட்ட போதிலும் நான் வெளிநாடு சென்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் பொய்,'' என்றார்.
தாக்குதல் நடக்கலாம் என எச்சரித்திருந்தால், நாட்டை விட்டு வெளியேறியிருக்க மாட்டோம் என்று சிறிசேனா கூறினார்.
தாம் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதாகவும், சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனையில் இருந்தபோது தான் எச்சரிக்கப்பட்டதாக கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவலைப் புறக்கணித்ததாக சிறிசேன மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பித்தக்கது. (யாழ் நியூஸ்)